இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘DABANGG’ படத்தின் ரீமேக்.
சிம்பு படம் முழுக்க நாடகம் போல் பேசிக்கொண்டே இருக்கிறார். அவர் கதையில் போலீஸா? ரௌடியா? ஒரே குழப்பம்.
ஒன்றுகொன்று கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத காட்சிகள். போலீஸ் உடையே போடாமல் எப்போதும் போலீஸ் வேலை பார்ப்பது என்பதையும் நம்பமுடியவில்லை. மனம் நொந்துகொண்டே நாம் படம் பார்க்கும் போது சந்தானம் வரும் காட்சிகள் மட்டும் சிரிக்க முடிகிறது.
நாயகி ரிச்சா. வருகிறார், பார்க்கிறார், சிரிக்கிறார் அவ்வளவுதான். ஏற்கெனவே ஆடியோவில் கேட்டு ரசித்த பாடல்களை திரைப்படத்தில் பார்க்கும் போது ரசிக்கும் படியாய் இல்லை.
சண்டைக்காட்சிகள் இழுவை ரகம். நம்ப முடியாத திரைக்கதை. படம் ஆரம்பத்திலிருந்து இரண்டு மணி நேரமும் நாடகம் பார்ப்தை போன்று கதாபாத்திரங்கள் வந்து வந்து செல்கிறது. சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. படத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை.பாடல் ஆடியோவில் மட்டும் ஒகே.
தில், தூள், கில்லி படங்களை இயக்கிய தரணிதான் இந்தப்படத்தின் இயக்குநரா என்று கேட்குமளவுக்கு அமெச்சூர்த்தனம்.
T.R பாணியில் சொல்வதென்றால் படம் பெயரோ ‘ஒஸ்தி’.
பார்த்தவர்கள் நம் நிலைமையோ ‘நாஸ்தி’.
எச்சரிக்கை
பார்த்து அவஸ்தைபடுவதைவிட, கேட்டு(ஆடியோ) நிம்மதியாக இருக்கலாம்.














