இயக்குநர் சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம்.
தலைப்பை பார்த்துவிட்டு எதிர்பார்ப்புடன் சென்றால் நாம் தியேட்டரை விட்டு வெளியே வரும் போது நமக்கு ஏற்படுவது பெருத்த ஏமாற்றம்தான்.
முதல்பாதியில் விக்ரமன் காலத்து திரைப்படக்காட்சிகள்,செயற்கையாக தெரிந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் செல்கிறது. சென்னையில் நண்பர்கள் தங்குவது, வேலைக்கு செல்வது, பக்கத்து வீட்டு பெண்ணை பார்த்து ஏங்குவது, பக்கத்து வீட்டு கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் சண்டை,நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்னை போன்ற காட்சிகளில் வேகமாகச் செல்லும் திரைக்கதை இடைவேளைக்குப் பின் உள்ள பிளாஷ் பேக் கதையுடன் உடைந்து விடுகிறது.
இரண்டாவது பாதியில் கதையில் உப்புச்சப்பில்லாத கதாபாத்திரங்கள் (செயற்கையாக) காகிதப்பூ போல் காட்சியளிக்கின்றன. முதல் பாதிக்கும் இரண்டாவது பாதிக்கும் சம்பந்தம் (லாஜிக்) எதுவும் இல்லை.
சித்தி கொடுமை, சித்தியின் உறவினர்கள் நாயகனிடம் கொண்ட கடுமை போன்ற பழைய சமாச்சாரங்கள் தாங்க முடியலை. பாடல்கள், இசை ரொம்ப ரொம்ப சுமார். மனநல மருத்துவமனையில் நடக்கும் கோரக்காட்சிகள் ஐயோ! ஹீரோ சசிக்குமார் நடிப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார். கஞ்சா கருப்புவின் காமெடியும் எங்கேயோ பார்த்த ரகம். ஹீரோயின் பாவம் யாருடைய மனசிலும் ஒட்டவே இல்லை...ஹீரோ உட்பட.
எச்சரிக்கை
படத்தலைப்பில் ”போராளி”
இடையில் ”கோமாளி”
படம் முடிந்து வெளியே வரும் போது நம்நிலை ”நோயாளி”.





No comments:
Post a Comment