Wednesday, 25 January 2012

காதலில் சொதப்புவது எப்படி?


சமீபத்தில் பார்த்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் (TRAILER) என்னை மிகவும் கவர்ந்தது.
இது  பெரிய எதிர்பார்பை  ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அவசியம் பாருங்கள்............


நண்பன்




இந்தியில்  “3 IDIOTS” என்ற பெயரில் வெளியாகி இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களில் அதிக வசூலை கொடுத்து உலகளவில் முதலிடத்தை பிடித்த இநதிய திரைப்படம். எனவே நண்பன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். மேலும் ஷங்கர், விஜய், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணி வேறு.

கதை கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் படிக்கும்போது நடந்த FLASH BACK சம்பவங்கள். சில இடங்களில் சுவையாகவும் பல இடங்களில் உப்பு சப்பின்றியும் இருக்கின்றன. வழக்கமாக திரைப்படங்களில் காட்டப்படும் கல்லூரி கலாட்டக்களை குறைத்து இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் போன்று கல்லூரியும் ஹாஸ்டலும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

சரியான கோணத்தில் திரைக்கதையை அமைத்து இருந்தாலும் கதாபாத்திரங்களிடையே நடக்கும் உரையாடல்கள் படத்தை கஷ்டப்பட்டு நகர்த்திச் செல்கிறது. மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்தில் நன்றாக இருந்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் ஜீவனாக இருந்தது. பாடல்கள் வழக்கமாக ஹாரிஸ் ரகம்.  

விஜய் தன் கதாபாத்திரங்களிலிருந்து விலகி நன்றாக நடித்திருக்கிறார். சத்யராஜ் உண்மையிலேயே வித்தியாச முக அமைப்புடன் மாறுபட்ட தோற்றத்துடன் நன்றாக நடித்திருக்கிறார். கதாநாயகி இலியானா படத்தில் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை.காமெடியன் சத்யன் சரியான கழுத்தறுப்பு. ஜீவாவும் ஸ்ரீகாந்தும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.
சத்யனைப்பற்றிய ‘GAS’ விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. இடைவேளையின் போதும், படத்தின் கடைசி அரைமணி நேரமும் நல்ல சுறுசுறுப்பு. மற்ற நேரங்களில் ரொம்ப இழுவை. படம் மொத்தம் 3 மணி நேரம்.


எச்சரிக்கை
நம்முடன் “நட்பு“டன் பழகாத நண்பர்கள். இவர்களின் நட்புக்கு பொறுமை வேண்டும்.

Monday, 23 January 2012

வேட்டை




படத்தின் தலைப்பு திகில் படம் போல தெரிந்தாலும் சுத்தமான அக்மார்க் மசாலாப் படம்தான். அண்ணன் தம்பி என்ற இரண்டு ஹீரோக்கள், அக்கா தங்கை என்ற இரண்டு ஹீரோயின்கள். இவர்களையும் வில்லனையும் வைத்துக்கொண்டு இடைவேளை வரை ஜாலியாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அது வேகமாக நம்மை படத்திற்குள் இழுத்துச்செல்கிறது.

அதற்கு பிறகு வழக்கமான மசாலா. வில்லன்கள் ஹீரோயின்களை அடிப்பதும், ஹீரோக்கள் வில்லன்களை பந்தாடுவதும்தான் இரண்டாம் பாதியாக வருவதால் முதல் பாதியில் உள்ள வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. மாதவன் தொப்பை இன்ஸ்பெக்டராக நடித்து சண்டை வேறுபோடுகிறார். சமீரா ரெட்டி முதிர் கன்னியாகிவிட்டார். இளமை மிஸ்ஸிங். ஆர்யா மற்றும் அமலாபாலின் காட்சிகளில் கொஞ்சம் கிளுகிளுப்பு. பாடல்களும் கொஞ்சம் பரவாயில்லை. வில்லன் ஏதோ ஒட்டாமல் நடித்துச்செல்கிறார். 

ஆர்யா ஆக்ஷன் ஹீரோவாக காமெடியாக நடித்துள்ளார். அமலாபாலும் தேவதை போல் வந்து நம் மனதை கொள்ளை கொள்கிறார்.இரண்டாவது பாதியில் வரும் வில்லன்களின் கொக்கரிப்பு, அடிதடி சண்டை அப்படியே தெலுகு டப்பிங் படத்தைப்போன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது.எல்லா காட்சிகளும் நாம் யூகிக்க்கூடியதாக முன்னரே பல படங்களில் பார்த்த காட்சியாக இருப்பதால் புதிதாக எதுவும் இல்லை.



எச்சரிக்கை
இந்தப்பொங்கலில் நமக்கு சரியான வேட்டை இல்லை.