படத்தின் தலைப்பு திகில் படம் போல தெரிந்தாலும் சுத்தமான அக்மார்க் மசாலாப் படம்தான். அண்ணன் தம்பி என்ற இரண்டு ஹீரோக்கள், அக்கா தங்கை என்ற இரண்டு ஹீரோயின்கள். இவர்களையும் வில்லனையும் வைத்துக்கொண்டு இடைவேளை வரை ஜாலியாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அது வேகமாக நம்மை படத்திற்குள் இழுத்துச்செல்கிறது.
அதற்கு பிறகு வழக்கமான மசாலா. வில்லன்கள் ஹீரோயின்களை அடிப்பதும், ஹீரோக்கள் வில்லன்களை பந்தாடுவதும்தான் இரண்டாம் பாதியாக வருவதால் முதல் பாதியில் உள்ள வேகம் இரண்டாம் பாதியில் இல்லை. மாதவன் தொப்பை இன்ஸ்பெக்டராக நடித்து சண்டை வேறுபோடுகிறார். சமீரா ரெட்டி முதிர் கன்னியாகிவிட்டார். இளமை மிஸ்ஸிங். ஆர்யா மற்றும் அமலாபாலின் காட்சிகளில் கொஞ்சம் கிளுகிளுப்பு. பாடல்களும் கொஞ்சம் பரவாயில்லை. வில்லன் ஏதோ ஒட்டாமல் நடித்துச்செல்கிறார்.
ஆர்யா ஆக்ஷன் ஹீரோவாக காமெடியாக நடித்துள்ளார். அமலாபாலும் தேவதை போல் வந்து நம் மனதை கொள்ளை கொள்கிறார்.இரண்டாவது பாதியில் வரும் வில்லன்களின் கொக்கரிப்பு, அடிதடி சண்டை அப்படியே தெலுகு டப்பிங் படத்தைப்போன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது.எல்லா காட்சிகளும் நாம் யூகிக்க்கூடியதாக முன்னரே பல படங்களில் பார்த்த காட்சியாக இருப்பதால் புதிதாக எதுவும் இல்லை.
எச்சரிக்கை
இந்தப்பொங்கலில் நமக்கு சரியான ”வேட்டை” இல்லை.




No comments:
Post a Comment